ஐயப்பன் விரதம் இருக்க வேண்டியவர்கள் சில நியமனங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
சபரி மலை செல்பவர்கள் விரதமிருக்கும் போது கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை..?

- சபரிமலை செல்பவர் ஒரு மண்டல காலம் (41 நாட்கள்) விரதமிருக்க வேண்டும்.
- விரத நாட்களில் இரு வேளைகள் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். உடனே வெறும் வயிற்றில் 108 ஐயப்பன் சரணம் கூறவேண்டும்.
- கருப்பு, நீலம், காவி இவற்றில் ஏதேனும் ஒரு கலரில் வேஷ்டி, சட்டை, துண்டு அணியவேண்டும்.
- உடல், உள்ளம் சுத்தமாக வேண்டும்.
- கார்த்திகை முதல் நாள் பெற்றோரை வணங்கி அவர்களின் அனுமதி பெற்றபின் குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும். பெற்றோர் மூலமும் மாலை அணியலாம்.
- பகலில் தூங்கக்கூடாது. மெத்தை, தலையணையின்றி வெறும் தரையில் மேல் ஆடையை விரித்து கையை தலைக்கு வைக்து தூங்கவேண்டும்.
- சைவ உணவே எடுத்துக்கொள்ள வேண்டும். தாடி வளர்க்க வேண்டும். செருப்பு அணியக்கூடாது.
- பிரம்மசரியம் கடைபிடிக்க வேண்டும். மது, சிகரெட், போதை அறவே கூடாது.
- இறந்தவர் வீட்டுக்குப் போகக் கூடாது. இறந்தவர் நெருங்கிய உறவினராக இருந்தால் சபரிமலை யாத்திரை செல்லக்கூடாது.
- ஐயப்ப பக்தர்களை ஐயப்பசாமி என்றே அழைக்க வேண்டும்.
- தீய வார்த்தைகள், தீய பழக்கம், தீய நட்பு, தீய செயல் செய்யக்கூடாது.
- மாதவிலக்கான பெண்களைக் கண்டால் உடன் குளிக்க வேண்டும்.
இப்படி கடுமையான விரதத்தைக் கடைபிடித்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வந்தால் உடலும் உள்ளமும் உறுதியும், ஆரோக்கியமும் அடையும். தேஜஸ் உண்டாகும். மனம் தூய்மை அடையும். நோய்கள் அண்டாது. ஆரோக்கியமான வாழ்வு பெறலாம்.