பொள்ளாச்சி வீடியோ விவகாரம்! ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு! அதிர்ச்சியில் திமுக!

டிகேஎஸ் இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது


சபரீசன் மீது பொய்யான வழக்கை போட்டு ஆளும் கட்சி தரம்தாழ்ந்து நடக்கிறது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கையாலாகாத தனத்தால் இதுபோன்ற பொய்புகாரை அளித்துள்ளனர்

முதலமைச்சர் மீதும் ஆளும் கட்சியினர் மீதும் தொடர் புகார் வருகிறது, கொடநாடு உட்பட புகார்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பொள்ளாச்சி விவகாரத்தை திசைத்திருப்பவே புதிய புகாரகள் கொடுத்து  ஆளும்கட்சி இவ்வாறு செயல்படுகின்றது

பொள்ளாச்சி விவாகரத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனையை பார்த்து சும்மா இருக்க முடியாது , ஆளும்கட்சி இதெற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்