ரூ.58 ஆயிரம் கடன் பாக்கி! இளம்பெண்ணின் 4 வயது மகனை கடத்தி கொலை செய்த கொடூரன்!

58 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்காத இளம்பெண்ணின் மகனை கடத்தி கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியமான புரத்தைச் சேர்ந்தவர் கெபின்ராஜ். இவரது மனைவி பெயர் சகாய சிந்துஜா. சிந்துஜா தனது வீட்டு செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய சாமியிடம் 58 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாகியும் இந்தக் கடன் தொகையை சிந்துஜா ஆரோக்கியசாமி இடம் கொடுக்காமல் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சகாய சிந்துஜாவிடம் சென்று அந்தோணிசாமி தனது பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார்.

அப்போது அந்தோணிசாமி சகாய சிந்துஜா மிகவும் மோசமாக பேசி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிந்துஜாவின் 4 வயது மகனை திடீரென மாயமாகியுள்ளார்.

பல இடங்களில் தேடியும் ரெய்னாவை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது சிறுவன் ரெய்னாவை அந்தோணிசாமி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதைப் பார்த்ததாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தோணிசாமி யைப் பிடித்து விசாரிக்க வேண்டிய முறைகள் போலீசார் விசாரித்தனர். அப்போது சிந்துஜா கடனைத் திருப்பித் தராத ஆத்திரத்திலும் தன்னை அவமானப்படுத்திய கோபத்திலும் அவரது மகனை கடத்திச் சென்று தென்னந்தோப்பில் உள்ள தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாக இத்தகவலை கூறியுள்ளான் அந்தோணிசாமி.

அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவன் ரெய்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். வெறும் 58 ஆயிரம் ரூபாய் கடனுக்காக பெண்ணின் மகனைக் கடத்திக் கொலை செய்த அந்தோணிசாமி தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.