கேப்டன் vs வைஸ் கேப்டன்! வெல்லப்போவது யார்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டி இன்று இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடங்கவுள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படு தோவியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 70 ரன்களுக்கு  ஆல் அவுட் ஆனது. இதனால் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால் இரு அணிகளும் தங்களது முதல் வெற்றியை பெற்றே ஆக வேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முந்தைய போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கேப்டன் vs வைஸ் கேப்டன்! வெல்லப்போவது யார்? இன்றைய IPL போட்டியின் சுவாரஸ்யமான விவரங்கள் இதோ!