இன்ஸ்பெக்டர் மகன்டா! ஒத்தைக்கு ஒத்தை வர்றியா? போலீசுக்கு சவால் விட்ட இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

மது அருந்திவிட்டு ஹெல்மெட் அணியாது சென்ற இளைஞர் போக்குவரத்து காவல் துறையினரை மிரட்டிய சம்பவத்தின் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.


சென்னையில் முக்கியமான இடத்தில் இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாது சென்றுள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த போக்குவரத்து  காவல்துறையினர் ஹெல்மெட் அணியாததற்கு கண்டித்தனர்.

ஆனால் குடிபோதையில் அந்த இளைஞர் காவலர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். காவலர்கள் அவரிடம் மிகவும் பொறுமையாக பேசியுள்ளனர். ஆனால் அவரோ, "ஒத்தைக்கு ஒத்தை வாடா" என்றும், "கோர்ட்டு பக்கம் வந்தா வெட்டிடுவேன்" என்று அநாகரீகமாக பேசியுள்ளார்.

மேலும் போட்டோ எடுப்பதற்கு கேட்டபோது, இரு விரல்களையும் நீட்டி நக்கலாக சிரித்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோவானது சென்னை மாநகர காவல்துறை ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

உடனடியாக அவர் அந்த இளைஞர்களை கைது செய்யுமாறு கூறியுள்ளார். அநாகரீகமாக பேசிய இளைஞர்,  சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார் என்றும் அவரது தந்தையான மைனர் சாமி திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றப்பிரிவு பகுதியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பதையும் காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

தந்தை மிகவும் நல்ல மனிதராக இருக்கும் போது மகன் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.