எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டியில் பட்டா வீச்சரிவாளால் கேக் வெட்டிய ரவுடி மாணவன்! சக மாணவர்களை பீதி அடைய வைக்கும் வீடியோ வைரல்!

வீச்சருவாளால் கேக் வெட்டி ரவுடி ஒருவர் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொத்தேரி எனும் இடம் அமைந்துள்ளது. அங்குள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவர் அப்பகுதியில் பிரபல ரவுடி. சில நாட்களுக்கு முன்னர் தமிழ்வாணனின் பிறந்தநாள் வந்தது. தன்னுடைய கூட்டாளிகளுடன் அங்குள்ள SRM பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் வீச்சருவாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 

இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழ்வாணன் தலைமறைவாகியுள்ளார். காவல்துறையினர் தமிழ்வாணனை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழ்வாணன் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்குகள் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.