தனி ரூம் தான் வேணும்..! வீதிக்கு வந்த சிங்கப்பூர் ரிட்டர்ன் ரவுடி பேபி சூர்யா பஞ்சாயத்து!

கொரோனா பரிசோதனைக்காக அழைத்து செல்ல வந்தவர்களிடம் தனி ரூம் தான் வேண்டும் என்று டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் டிக் டாக் செயலி பிரபலமாகியுள்ளது. இந்த செயலிக்கு பலரும் அடிமையாகி உள்ளனர் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் இதில் வீடியோ பதிவிட்டு அதன் மூலம் பெரும் லைக்கு களுக்காக பலரும் தங்களால் இயன்ற வரை முயற்சி செய்து வருகின்றனர். இதனால் ஒரு சிலர் போலீசிடம் தர்ம அடி வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த செயலியை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தன் வசம் படுத்துகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் ரவுடி பேபி சூர்யா. 

டிக்டோக் செயலியை பயன்படுத்தும் பலருக்கும் நன்கு தெரிந்த ஒரு நபர் தான் ரவுடி பேபி சூர்யா. இவர் டிக்டாக்கில் செய்யும் அட்டூழியங்கள் எங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. சமயங்களில் மேலாடை இல்லாமலும் கீழாடை இல்லாமலும் பதிவிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் லட்சக்கணக்கான லைக்ஸ் களை அள்ளும். யாராவது ஒருவர் அவரது உடையைப் பற்றி தவறாகப் பேசிவிட்டால் போதும் அந்த நபரை கண்டபடி நினைக்கும் வார்த்தைகளை திட்டுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டு வருகிறார். மலேசியாவை சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிங்கப்பூர் சென்றிருந்தார்.

அதற்குப் பின்பு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அவர் சிங்கப்பூரிலேயே ஒரு சில மாதங்கள் தங்கி விட்டார். தற்போது மீண்டும் சிறப்பு விமானத்தின் மூலமாக இந்தியா திரும்பியுள்ளார். கோவை விமான நிலையம் வந்து இறங்கிய ரவுடி பேபி சூர்யாவை தனியாக ஹோட்டலில் தங்க வைத்து தனிமைப்படுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் நேற்றைய தினம் திருப்பூரில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து அவர் வீடு திரும்பியதால் அக்கம் பக்கத்தினருக்கு கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் அவர்கள் சுகாதார துறை யினருக்கு ரவுடி பேபி சூர்யாவை பற்றி தகவல் அளித்துள்ளனர். 

தகவலறிந்து வந்த அவர்கள் ரவுடி பேபி சூர்யாவை கொரோனா பரிசோதனைக்காக அழைத்துள்ளனர். சுகாதார துறையினர் அவரை அழைத்த பொழுது, அதிகாரிகளிடம், இங்க பாருங்க சிங்கப்பூர்ல நான் ஏசியிலேயே இருந்து வந்து இருக்கேன்.. தமிழ்நாட்டுல அடிக்கிற வெயில்ல எனக்கு உங்ககிட்ட இருந்து கொரோனா வந்து விடுமோ என்று பயமாய் இருக்கு. அதனால அரசு ஆஸ்பத்திரியில் எனக்குன்னு தனியா ஒரு ரூம் வேணும். இல்லனா என்னால ஃப்ரீயா பாத்ரூம் கூட போக முடியாது. மேலும் என்னோட ரசிகர்கள் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. நீங்க ஒருவேளை எனக்கு தனி ரூம் தரலைன்னா நான் உங்ககிட்ட கண்டிப்பா பிரச்சனை செய்வேன் என்று கூறியிருக்கிறார். 

நீண்டநேர அடாவடிக்கு பின்பு ரவுடிபேபி சூர்யாவை அதிகாரிகள் ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் சென்று பரிசோதனை மேற் கொண்டுள்ளனர். கொரோனா பரிசோதனையின் முடிவு இன்றைய தினம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சற்று அது வெளிநாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.