ஜிபி முத்து மாமாவுக்கு நான் ரெண்டாவது..! அவர் எனக்கு ஆறாவது..! ரவுடி பேபி சூர்யா வெளியிட்ட பகீர் தகவல்!

டிக்டாக்கில் தன்னை கிண்டல் செய்த முத்துவுடன் தற்போது ரவுடி பேபி சூர்யா மிகவும் இணக்கமாக செயல்பட்டு வருவது நெட்டிசன்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


மலேசியா நாட்டில் வசித்து வருபவர் ரவுடி பேபி சூர்யா. இவருடைய இயற்பெயர் அம்மணி. இவர் டிக்டாக்கில் தன்னுடைய நடிப்புத் திறமையை அரைகுறை ஆடையுடன் வெளிப்படுத்தி வருகிறார். காதல், குத்துப்பாட்டு சோகப்பாட்டு ஆகிய அனைத்து ரகங்களிலும் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவருடைய வீடியோக்களுக்கு லைக்குகள் அதிகமாகி கொண்டேபோன நேரத்தில், இவருடைய ஆடைகளும் குறைய தொடங்கின.

இதனால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவருடைய கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனுடைய டிக்டாக்கில் இவரை கிண்டல் செய்வதற்காகவே ஆணொருவர் இவரிடம் பேசி வந்துள்ளார். அதாவது ரவுடி பேபி சூர்யா தன்னுடைய தொப்புள் வீடியோவை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.

இதற்கு எதிராக முத்து என்பவர் கமெண்ட் செய்திருந்தார். அப்போது ரவுடி பேபி சூர்யா, "என் சிம்ரன் தொப்புள்ள பம்பரம்விட்டா, ஆம்லெட் போட்டா பாக்குறீங்கல!! ஏன் நாம் போட்டா மட்டும் திட்டுறீங்க" என்று நக்கலாக கேட்டிருந்தார். அப்போது முதல் இருவரும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தனர்.

நாள் சமீப காலத்தில் இருவருக்கும் இடையேயான நெருக்கம் மிகவும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் கணவன்-மனைவி போன்று மிகவும் பாசமாக கொஞ்சி குலாவுகிறார்கள் என்று நெட்டிசன்கள் வெட்கப்பட்டு புலம்பி வருகின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றன. 

ஜிபி முத்துவுக்கு நான் ரெண்டாவது மனைவி தான்.. என்று சூர்யா கூற அதை மறுக்காமல் முத்துவும் சிரித்துக் கொண்டிருக்க இந்த விவகாரம் அடுத்த நிலைக்கு சென்றுள்ளது.