யூனிபார்மில் இருந்த போலீசுக்கு அடி உதை! நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை! ரவுடி அண்ணன் தம்பிகளின் அட்டகாசம்!

காவல்துறையினருடன் ரவுடிகள் கட்டிப்புரண்டு சண்டைபோடும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கரிக்கலாம்பாக்கம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்குள்ள காவல் நிலையத்தில் குரு மற்றும் மைக்கேல் என்று 2 கான்ஸ்டபிள்கள் பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல நேற்று மாலை 7 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அதே பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாவார். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். வெளியூரிலிருந்து கரிக்கலாம்பாக்கத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது காவல்துறை அதிகாரிகள் ஆனால் குரு மற்றும் ஜோசப் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். 

கரிக்கலாம்பாக்கத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதால் ஜோசப்பை காவல்துறையினர் நுழைய விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜோசப் தன்னுடைய தம்பியான மணிகண்டனுடன் இணைந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி போய் இருவரும் காவல்துறையினரிடம் சண்டை போட தொடங்கினர்.

பொதுமக்கள் முன்னிலையில் 4 பேரும் கட்டிப்புரண்டு அடித்து கொண்டனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஜோசப் மற்றும் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவமானது கரிக்கலாம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.