தெலுங்கு திரையுலகின் ஜாம்பவானான நடிகர் நாகார்ஜுனாவின் பண்னை வீட்டில் அழுகிய நிலையில் இருந்த சடலமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா மாமனார் பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம்! அதிர வைத்த சம்பவம்!
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் நடிகர் நாகார்ஜுனாவும் ஒருவர். இவர் சமீபத்தில் ரங்காரெட்டி எனும் மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிகுடா என்ற இடத்தில் 40 ஏக்கர் மதுபான பண்ணை வீடு ஒன்றை விலைக்கு வாங்கினார்.
அந்த இடமானது பல ஆண்டுகளுக்கு உபயோக படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் சில விவசாயிகளை நியமித்து அந்த இடத்தில் இயற்கை விவசாயம் செய்வதற்கு நாகார்ஜுனா திட்டமிட்டிருந்தார். இதற்காக அங்கு நிறைய விவசாயிகள் சென்றிருந்தனர்.
அப்போது அந்த 40 ஏக்கர் நிலத்திற்குள் அமைந்திருந்த உபயோகப்படாத வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இதனால் விவசாயிகள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் ஒரு உடல் இருந்ததை கண்டு பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அப்பகுதி கிராம அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்து விரைந்து வந்த கிராம அலுவலர் சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
கேஷாம்பேட் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாயை அலைய விட்டு பல்வேறு தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இறந்தவர் 6 மாதங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர்.
மேலும் காணாமல் போனவரின் பட்டியலில் இருந்து இறந்த அவரை அடையாளம் காண்பதற்கு காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது ரங்காரெட்டி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.