ரோட்டரி கிளப் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய சின்மயி தரக்குறைவாக பேசியுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 லட்சம் ரூபாய் வாங்கிட்டு பாதியிலேயே போறா பாரு..! சின்மயியின் பேமென்ட் குறித்து வெளியான பகீர் தகவல்!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ரோட்டரி கிளப்பின் "சிம்மாசனம் 2020" என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான நிகழ்ச்சிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப்பின் மாவட்ட கவர்னர் டாக்டர் ஜமீர் பாஷா மற்றும் சேர்மேன் திருநாவுக்கரசர் ஆகியோர் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த விழாவில் நக்கீரன் கோபால் மற்றும் செய்தி தொடர்பாளர் கார்த்திகை செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆண்ட்ரியா, சின்மயி, சாக்ஷி அகர்வால் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் சின்மயி பேசியபோது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசத் தொடங்கினார். தன்னுடைய பேச்சில் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து அவர்களை தாக்கி வந்தார். சில சமயங்களில் நக்கீரன் கோபாலையும் தனிமையில் தாக்கி பேசினார்.
நக்கீரனில் "சின்மயி ஒரு பாஜக ஆதரவாளர். அவருக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பரிசு அளிக்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டிருந்தது. அது உண்மையாக இருப்பின் அந்த குடியிருப்பின் சாவியை என்னிடம் தாருங்கள்" என்று நக்கீரன் கோபாலை மேடையில் பேசினார். அப்போது ரோட்டரி கிளப்பின் உறுப்பினர்கள் அவரை சற்று கண்டித்தனர்.
உடனடியாக இதற்கு மேல் பேச முடியாது என்று கூறி விட்டு மேடையை விட்டு விலகி சென்றார். அப்போது அரங்கில் இருந்தோர், "2 லட்சம் ரூபாய் வாங்கிகிட்டு பாதியிலேயே போராப்பாரு. இப்ப தெரியுது சின்மயியை பற்றி" என்று கமென்ட் அடித்தனர். இந்த சம்பவமானது ரோட்டரி கிளப் விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.