நீ இல்லாம வாழ முடியல! என்கிட்ட வந்துடு! மலேசிய இளைஞனுக்காக உருகிய ரோஜா பிரியங்கா!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் ரோஜாசீரியல் முக்கிய பங்கு வகிக்கிறது . இந்த சீரியல் ஒளிபரப்பான சிறிது சில நாட்களிலேயே மக்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்றது.


இந்த ரோஜா சீரியலில் ரோஜா இந்த கதாபாத்திரத்தை எடுத்து நடித்திருப்பவர் நடிகை பிரியங்கா . இவர் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு திரை உலகில் அறிமுகம் ஆனார். தன்னுடைய சிறுவயது முதலேயே தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதில் பேர் ஆர்வம் கொண்டவர் இவர் . இதனையடுத்து தீயா வேலை செய்ய குமாரு என்னும் திரைப்படத்தில் ஹன்சிகாவுக்கு தோழியாக நடிக்கும் கதாபாத்திரத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது . ஆனால் ஒரு சில காரணங்களினால் அந்த வாய்ப்பில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்த பிரியங்காவிற்கு ரோஜா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரோஜா , தன்னுடைய வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்றுதான் கூற வேண்டும் . தற்போது ரோஜா சீரியலுக்கு என்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ப்ரியங்கா என்றே கூறலாம். இத்தனை புகழ் பெற்ற ரோஜா மகிழ்ச்சி அடையாமல் மன உருக்கமாக காணப்படுவதற்கான முக்கிய காரணம் என்ன என்று நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ரோஜா என்கிற பிரியங்காவிற்கு கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது அதனை தொடர்ந்த அவருடைய திருமணம் பற்றிய எந்தவித அறிவிப்பும் இதுவரை ஏன் வெளிவரவில்லை? எனவும் பிரியங்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது .

ராகுல் என்கிற கிட்டு விற்கும் பிரியங்கா விற்கும் கடந்த ஆண்டு மே மாதம் 10ஆம் நாள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ராகுலும் தெலுங்கு சினிமாவில் திரைப்படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர். அவர் ஒரு புறம் திரைப் படத்தில் பிஸியாக நடித்து வந்துகொண்டிருக்கிறார் . அதேசமயம் பிரியங்காவும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் நேரம் ஆனது குறைந்துவிட்டது. இதனையடுத்து இருவருக்குமிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நடிகர் ராகுல் மலேசியாவிற்கு வேலை பார்க்க சென்று விட்டாராம். இருப்பினும் இவர்களுக்கிடையில் பிரேக்கப் எதுவுமில்லை . விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பிரியங்கா கூறியுள்ளார். 

இதனையடுத்து நடிகை ப்ரியங்கா மிகவும் மனமுருகி அவருடைய கிட்டு இல்லாம வாழ முடியல!..என்கிட்ட வந்துடு.. என ரோஜா பிரியங்கா, அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறி உள்ளார்.