சச்சின் 40 போட்டிகளில் செய்த சாதனை! 37 போட்டிகளில் முறியடித்த ரோஹித்! மெர்சலான ஆஸி.,

இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா 57 ரன்களை அடித்ததன் மூலமாக  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதுவரை 4 வீரர்கள் மட்டுமே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் 2000 ரன்களை கடந்துள்ளனர். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 3077 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எடுத்து  உள்ளார்.

ஆனால் சச்சின் டெண்டுல்கர் 2000 ரன்களை 40 போட்டிகளில் கடந்தார். ஆனால்  ரோஹித் சர்மா 37 போட்டிகளில் கடந்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.

இவர்களுக்கு அடுத்த படியாக மேற்கிந்திய தீவுகளின் வி ரிச்சர்ட்ஸ் 44 போட்டிகளில் 2000 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடந்து 3வது இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஹெய்ன்ஸ் 54 போட்டிகளில் 2000 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடந்து 4வது இடத்தில உள்ளார்.