பாக்., கேப்டனின் சக்கர வியூகம்! இரட்டை சதத்தை தவறவிட்ட ரோஹித்! களத்தில் என்ன நடந்தது?

பாகிஸ்தான் கேப்டனின் சிறப்பான வியூகத்தால் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ரோஹித் ஷர்மா 140 ரன்களில் ஆட்டம் இழந்தார்.


மான்செஸ்டரில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான்அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய ரோஹித் ஷர்மா – கே.எல்.ராகுல் ஜோடி அசத்தலாக ஆடி ரன்களை குவித்தது.

மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா சதம் அடித்து அசத்தினார். 30வது ஓவரிலேயே அவர் சதம் அடித்திருந்த காரணத்தினால் நிச்சயமாக இந்த போட்டியில் ரோஹித் இரட்டை சதம்அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 140 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது ஹசன் அலி வீசிய பந்தை ஷாட் பைன் லெக்கில் தூக்கி அடித்த ரோஹித் வஹாபிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இங்கு தான் தனது வியூகத்தை பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் சிறப்பாக செய்திருந்தார்.

இரண்டு ஓவருக்கு ஒரு முறை ரோஹித் ஷாட் பைன் லெக்கில் பந்தை தூக்கி அடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அங்கு பீல்டிங்கை பாக் கேப்டன் செட் செய்யவில்லை. ஆனால் ஹசன் அலி ஓவரில் திடீரென ஷாட் பைன் லெக் பகுதியில் வஹாபை பீல்டிங் நிறுத்தினார் சர்ப்பராஸ்.

இதனை ரோஹித் கவனிக்கவில்லை. இந்த நிலையில் ஹசன் ஷாட் பால் வீச அதனை வழக்கம் போல் ஷாட் பைன் லெக் பகுதியில் ரோஹித் தூக்கி அடித்த போது கேட்ச் ஆனது. சிறப்பான பார்மில் ஆடிக் கொண்டிருந்த ரோஹித்தை கிட்டத்தட்ட சக்கர வியூகம் வகுத்தது போல் ஆட்டம் இழக்கச் செய்துள்ளார் சர்ப்ராஸ்.