கோவத்தில் ஸ்டம்பை தாக்கிய ரோஹித்! கடுப்பான அம்பயர்! அபராதம் விதித்த IPL நிர்வாகம்!

நேற்றய தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் ipl போட்டி நடைபெற்றது.


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் கொல்கத்தா ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்து  கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணித்தது. பின்பு கொல்கத்தா ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 2  இழப்பிற்கு 232 ரன்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடாமல் சீரான இடைவெளியில் எதிரணியிடம் விக்கெட்களை பறிகொடுத்தனர்.  ஆட்டத்தின் முதற் கட்டத்திலே ரோஹித் சர்மா 12 ரன்கள் எடுத்த நிலையில் LBW -இல் ஆட்டம் இழந்தார்.

இதனால் அவர் மிகுந்த விரக்தி அடைந்தார் . ஆட்டமிழந்த விரக்தியில், அம்பையர் அருகில்  இருந்த ஸ்டம்பை தனது பேட்டால் தாக்கினர். இதனால் ஸ்டம்பை தாக்கிய ரோகித் சர்மாவுக்கு, போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  


பின்பு களமிறங்கிய ஹர்டிக் பாண்டிய மட்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயம் காட்டினார். இவர் 34 பந்துகளில் 91 ரன்களை குவித்து ஆட்டத்தில் பரபரப்பை கூட்டினார். எனினும் மும்பை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.