எங்க அப்பாவும் குண்டு..! அம்மாவும் குண்டு..! பிகில் டிரைலரில் மகளை பார்த்து கண் கலங்கிய ரோபோ சங்கர்! காரணம் இது தான்!

பிகில் திரைப்படத்தின் டிரைலர் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியானது.


அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வர உள்ளது . இந்நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகில் திரைப்படத்தின் டிரைலர் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியானது.

டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே விஜய் ரசிகர்கள் பிகில் திரைப்படத்தின் டிரைலரை சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆக்கினர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ட்ரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. 

பிகில் திரைப்படத்தில் காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் நடித்துள்ளார். கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக இந்த திரைப்படத்தில் ரோபோ சங்கரின் மகள் நடித்துள்ளார் .இந்நிலையில் சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படத்தின் ட்ரைலரில் ஒரு காட்சியில் ரோபோ சங்கரின் மகள் இடம் பெற்றிருக்கிறார். அந்த காட்சியில் என் அப்பாவும் குண்டு, அம்மாவும் குண்டு நான் மட்டும் ஒல்லியாவா இருப்பேன்னு அவர் அழுவார்.

இந்த காட்சியை பார்த்தே ரோபோ சங்கர் கண் கலங்கியுள்ளார். பிகில் திரைப்படத்தின் டிரைலரின் ஒரு காட்சியில் என் மகள் இடம்பெற்றிருப்பதை பார்த்து என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. என் மகளுக்கு இப்படி ஒரு அருமையான வாய்ப்பு  தந்த நடிகர் விஜய் அவர்களுக்கும் , இயக்குனர் அட்லி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் எனவும் நடிகர் ரோபோ சங்கர் டுவிட் செய்துள்ளார்.

மேலும் பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் பிரமாதமாக வந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார் .