விஜய் டிவி டிடி போகும் இடமெல்லாம் அந்த நோய் பரவும்..! ரோபோ சங்கர் வெளியிட்ட ஷாக் தகவல்!

சென்னை: எங்கு சென்றாலும் அந்த இடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் திறமை படைத்தவர் டிடி, என்று நடிகர் ரோபோ சங்கர் பாராட்டி பேசியுள்ளார்.


பிளான் பண்ணி பண்ணனும்' என்ற புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாணா காத்தாடி, செம்ம போத ஆகாதே போன்ற படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரோபோ சங்கர் பேசியதுதான் ஹைலைட். அவர் பேசுகையில், ''டிவி தொகுப்பாளினி டிடிக்கு ஒரு மாஸ்க் அணிவித்தால் பார்ப்பதற்கு  சீனப் பெண் போலவே இருப்பார். கொரோனா வைரஸ் மாதிரிதான் டிடியும். அவர் எங்கு சென்றாலும் மகிழ்ச்சியை பரவச் செய்வார்.

அந்தளவுக்கு கலகலப்பான நபர். இதுதவிர, நான் நடித்த படங்களில்  மிக குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம் இதுதான். வெறும் 28 நாட்களில் ஷூட்டிங் முடிந்துவிட்டது. கண்டிப்பாக, பிளான் பண்ணித்தான் இந்த படத்தை எடுத்துள்ளனர். நிச்சயமாக படம் வெற்றி பெறும்,'' என்று ரோபோ ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.