தெருக்களில் குப்பை அள்ளிய பிரேமலதா..! தே.மு.தி.க.வினருக்கு பலே பாராட்டு.

வறுமை ஒழிப்பு தினத்தன்று தேமுதிக நிர்வாகிகள் செய்ய வேண்டிய சமூக சேவைகளை பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கையில் வெளியிட்டு அதை செய்தும் காண்பித்துள்ளார்.


ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழைகளின் வறுமையை போக்குவதற்கும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அரசியல் கட்சிகள் உதவுவர்.அவ்வகையில் இன்று தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த், மேற்கு சென்னை மாவட்ட கழகம் சார்பில் விருகம்பாக்கத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதேபோன்று அப்பகுதியில் முறையற்ற சாலைகள் இருந்து வருகின்றன. சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழையில் லேசான மழைக்கே அவ்விடத்தில் உள்ள சாலைகள் பெரிய அளவில் பராமரிக்கப்பட வேண்டிய நிலையை எட்டியுள்ளன.

இதனை கருத்திற்கொண்டே பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் அவற்றை சுத்தம் செய்து அறிவுரை வழங்கினார். அவரின் அறிவுரைப்படி சாலைகள் சற்று சீரமைக்கப்பட்டன. வடிகால்கள் மற்றும் பொதுஇடங்களில் கிடந்த குப்பைகளை அகற்றினார். மேலும் அவற்றை போட வேண்டிய சரியான இடத்தில் கொண்டு சேர்த்தனர்.

இந்த சம்பவமானது விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.