குண்டும் குழியுமாக சாலை! தடுமாறிய வாகனங்கள்! காக்கி யூனிபார்முடன் களம் இறங்கி சீரமைத்த போலீஸ்! மக்களை நெகிழ வைத்த செயல்!

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க போக்குவரத்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


திருவள்ளூர் மாவட்டத்தில் மணலி எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சீரமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வெறுப்புற்ற போக்குவரத்து அதிகாரிகள், தாங்களே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுடைய சொந்த செலவிலேயே இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு மட்டுமின்றி சிமென்ட்,ஜல்லி கலந்த கலவைகளை தாங்களே சுமந்து வந்து சாலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுடைய வழக்கமான பணிக்கு இடையே காவல்துறையினர் செய்த செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது மணலி பொதுமக்களிடையே போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது.