குச்சியை வைத்து பெயர்த்தால் கையோடு வரும் தார்ச் சாலை! எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்! அதிர்ச்சியில் கிராம மக்கள்!

முறையற்ற வகையில் தார் சாலை அமைப்பதாக தர்மபுரியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


தர்மபுரியில் பொம்மிடி எனும் இடம் அமைந்துள்ளது. இதனருகே முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இவ்விரண்டு இடங்களையும் இணைப்பதற்கான சாலை அடிக்கடி பழுதடைந்து விடுகிறது.

இதனால் இவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அரசாங்கத்தினர் தற்போது புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இது மிகவும் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். கைகளை கொண்டு கிளறினாலும் தார்கலவைகள் பெயர்ந்து வரும் நிலையில் உள்ளன.

இந்த பகுதியில் கடந்த 5 வருடங்களாக 5 முறை சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் 5 முறையும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினர் ஒப்பந்தகாரர்கள் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.