மீ டூ பாலியல் சீண்டல்கள்! களம் இறங்கிய இறுதிச் சுற்று நாயகி!

நடிகை ரித்திகா சிங், #metoo சர்ச்சை தொடர்பான கதை ஒன்றில் நடிக்கிறார்.


இறுதிச்சுற்று படம் மூலமாக, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பாராட்டுகளை பெற்றவர் ரித்திகா சிங். அதன்பின், ஆண்டவன் கட்டளை, குரு, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக, சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே தேசிய விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளை ரித்திகா சிங் வாங்கியுள்ளார். 

இந்நிலையில், ரித்திகா சிங், சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய #metoo பாலியல் புகார் பற்றிய கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் அவர் காலேஜ் படிக்கும் மாணவியாக நடிக்கிறார் என்றும், பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் அவரை பற்றியும், காமவெறி பிடித்து அலையும் மனிதர்கள் பற்றியும் இப்படத்தின் கதை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

#MeToo என்றே பெயரிடப்பட்டுளள இந்த படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஹர்ஷ் வர்தன் இயக்கியுள்ளார். 7 மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு, தயாரிப்பு பணிகள் முடிந்து, படமும் தயாராகிவிட்டது. ஆனால், சென்சார் போர்டு படத்தின் வசனங்கள் பற்றி அதிருப்தி தெரிவித்து, திருப்பி அனுப்பிவிட்டது. 

மேலும், சென்னையில் மறு சீராய்வுக் குழுவும், இந்த படம் பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளது. இதையடுத்து, நீதிமன்ற அனுமதியை பெற்று, படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக, படக்குழு. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.