ரேசன் கடையில் புளுத்துப்போன அரிசி!பைக்கில் சென்று அதிரடி காட்டிய செல்லூர் ராஜூ! முதல்வன் படத்தை மிஞ்சிய நிஜ ஆக்சன்!

ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசியை வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சர் செல்லூர் ராஜு நடவடிக்கை எடுத்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் பெத்தானியாபுரம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கொரோனா நிதி உதவி வழங்குவதற்காக அமைச்சர் செல்லூர் ராஜு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, இங்குள்ள ரேஷன் கடைகளில் மாதாந்திர பொருட்களை வாங்குவதற்காக கார்த்திகைச்செல்வி என்ற பெண் சென்ற போது அந்த ரேஷன் கடையில் மிகவும் அழுக்கான அரிசி மற்றும் எடைக்குறைவாக அரிசி போடப்பட்டதாகவும் அமைச்சரிடம் புகார் அளித்துள்ளார். மேளம் தட்டி கேட்டபோது அநாகரீகமாக தன்னை பேசியதாகவும் கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக தன்னுடைய கட்சிக்காரர் ஒருவரது இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டு‌ பாண்டியராஜபுரம் ரேஷன் கடைக்கு சென்றார். அமைச்சர் திடீரென்று இருசக்கர வாகனத்தில் ஆவேசமாக சென்றதை பார்த்த அதிகாரிகளும் காவல் துறையினரும் அவரை பின்தொடர்ந்தனர். 

மேலும் கார்த்திகைசெல்வியை கட்சிக்காரர்கள் உடன் சேர்ந்து ரேஷன் கடைக்கு அழைத்து வந்தார். ரேஷன் கடைக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜு வருவதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கார்த்திகை செல்வியை அருகில் வைத்துக்கொண்டு அவர் ரேஷன் கடை அதிகாரிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டார். 

அப்போது ரேஷன் கடை அதிகாரியான தர்மேந்திரா கூறிய காரணங்களை அமைச்சர் செல்லூர் ராஜு ஒப்புக்கொள்ளவில்லை. உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்வதாக அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்தார். மேலும் கடைக்கு சம்பந்தமில்லாத நபர் அங்கிருந்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 

சாமானிய பெண் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்த சம்பவமானது அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் இருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.