சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்! பழைய ஒயின் ஆனா செம டேஸ்ட்!

இயக்குனர் சசி எப்பவுமே என்னை ஆச்சர்யப்படுத்துற ஆளு. ரொம்ப நிதானமா படம் பண்ற, ஆனா தெளிவா இருக்குற ஒருத்தர்.


சொல்லாமலே படத்துல ஆரம்பிச்சி போன பிச்சைக்காரன் வரைக்கும் அத நிரூபிச்சிருக்காரு. அவர் இயக்கி சரியா ஓடாத 555 படம் கூட எனக்கு பிடிக்கும். அப்டி எதோ ஒரு எலிமன்ட் நம்மளை ஈர்க்குற மாதிரி படத்துல வைக்கிறதுல கில்லாடி. இதோ இப்ப சிவப்பு மஞ்சள் பச்சை.

டீசர், ட்ரைலர் எல்லாம் பார்த்துட்டு இது பக்கா ஆக்‌ஷன் படம்னு உள்ளே போயி உக்காந்தா ஒரு அட்டகாசமான எமோசனல் ட்ராமாவை ப்ரசன்ட் பண்ணியிருக்காரு. கரெக்டா சொல்லனும்னா ரன் படத்துல ரகுவரன் ,மாதவனுக்கு இடையில இருக்குற அந்த உறவோட எக்ஸ்டென்ட் வெர்சன்தான் இது. ஆனா அதுக்கு திரைக்கதை எழுதுன விதத்துல சசி did an amazing job.

படத்தோட மிகப்பெரிய பலம் நடிகர்கள் தேர்வுதான். சித்தார்த்தும், ஜிவி பிரகாஷூம் அட்டகாசமா பொருந்தியிருக்காங்க. குறிப்பா ஜிவி மட்டும் இப்டியான ஸ்க்ரிப்ட்ஸ் நாலஞ்சி செலக்ட் பண்ணி தொடர்ந்து நடிச்சா பெரிய உயரத்துக்கு கண்டிப்பா போவாரு.

அவரோட ரியாக்சன்ஸ், கோபம் எல்லாமே நல்லா இருக்கு. சித்தார்த் பாந்தமா அதேநேரத்துல நக்கலா பல இடங்களல ஸ்கோர் பண்றாரு. அந்த அக்கா கேரக்டர் பண்ண பொண்ணும் செமயா பண்ணியிருக்காங்க. வாழ்த்துகள்.

ஒரு ரெண்டு பேருக்கு நடுவுல வெறுப்பு ஒன்னு வரணும். அதுக்காக ஒரு அழுத்தமான காட்சி வேணும். அத அந்த கேரக்டர்ஸ் பண்ற தொழிலை வச்சே அமைச்சது செம திங்கிங். அதேமாதிரி சின்ன சின்ன க்யூட் சீன்ஸ். இடைவேளைக்கு பிறகு வர்ற அந்த முதல் சண்டைக்காட்சியும், அதுக்கு சித்தார்த்தும், ஜிவியும் குடுக்குற ரியாக்சனும் செம.

அப்புறம் காயப்போட்ட ரெண்டு பேர் சட்டையையும் ஒரே க்ளிப்ல மாட்டுறது, அதப்பார்த்து சித்தார்த் புரிஞ்சிக்கிறது, ஆனா அடுத்த செகன்டே ஜிவி டென்சனாகுற மாதிரி சீன் வைச்சது எல்லாம் அதகளம். வழக்கமா சசி படங்கள்ல காமெடிக்கு தனி ஸ்கோப் இருக்கும். இதுல அப்டி தனியா எதுவும் வைக்கல. அது ஒரு சிறு குறையா இருந்தாலும் கூட இந்த மாதிரி காட்சிகள் அத நிறைவேத்துது.

படத்துல நிறைய குறைகளும் இருக்கு. குறிப்பா அக்கா கர்ப்பமா இருக்குறாங்கிறது தெரியாமயே ஜிவி சுத்துறது.. க்ளைமாக்ஸ்ல பெரிய ரம்பம் போடுற ஒரு காட்சின்னு க்ளிஷேக்கள் இருந்தாலும் கூட, கடைசி ஷாட்ல மூனு மாமன் - மச்சானுங்க அப்டி தலைய நிமித்திட்டே போற அந்த ஒரு ஷாட்ல மிகப்பெரிய ஆனந்தம் கிடைச்சது மனசுக்கு.

சினிமா பார்க்குறவனுக்கு அந்த ஆனந்தந்தை தவிர வேற என்ன வேணும்?? 

விமர்சனம்: பாலகணேசன்.