உல்லாசத்துக்கு அழைத்ததும் அந்த நடிகை ஓடோடி வந்தார்! பிரபல நடிகர் ஷாக் தகவல்!

கடந்த ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு சம்பவம் என்று பார்த்தால் அது "மீ டூ" தான்.


சமூக வலைதளத்தில் இதற்கு சாதகமாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.  இதன் தாக்கம் அடங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயிர்பிக்கிறது என்றே கூறலாம்.  ஏற்கனவே இந்த சர்ச்சையில் பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஒரு மலையாள நடிகர் சித்திக் சிக்கி உள்ளார். இவர் மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்து உள்ளார்.  

நடிகர் சித்திக் தமிழ் சினிமாவில் ரங்கூன்,  ஜனா, வைகை எக்ஸ்பிரஸ், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவர் மீது இளம் மலையாள நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த செய்தியை ரேவதி சம்பத் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலம் தெரிவித்து இருந்தார்.

"கடந்த 2016-ஆம் ஆண்டு "சுகமாயிரக்கட்டே" என்ற மலையாள படத்தின் ப்ரீவியூக்காக திருவனந்தபுரம் சென்றேன்.  அப்போது  எனக்கு வயது 21, அங்கு வந்திருந்த நடிகர் சித்திக் வெளிப்படையாக அட்ஜஸ்ட் மென்ட்க்கு  நீங்கள் தயாரா? என்றும், மஸ்கெட்டிற்கு வரமுடியுமா? என்றும் கேட்டார். 

இதனால் நான் மிகுந்த கோபம் அடைந்தேன் அப்போது "இதை நீ யாரிடம் வேண்டுமானாலும் கூறிகொள் எனக்கு அதை பற்றிய கவலை இல்லை" என்றும் கூறினார். "நடிகர் சித்திக்கிற்கு என் வயதில் மகள் இருக்கிறாள். எப்படி இந்த மாதிரியான அப்பாவிடம் அவள் பாதுகாப்பாக இருக்க இயலும்?" என்று தனது பேஸ்புக் போஸ்டில் கேள்வி எழுப்பினார் நடிகை ரேவதி சம்பத்.

மேலும் "சித்திக் நீங்கள் பொய்யான முகமூடி அணிந்து கொண்டு நடித்தது போதும்" என்று கோபமாக பதிவு இட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனது சமூக வலை தள பக்கத்தில் நடிகர் சித்திக் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் உல்லசாமாக இருக்க ஒரு பெண்ணை அழைக்கிறார். அந்த பெண்ணும் விருப்பப்பட்டு சித்திக்கிடம் ஓடி வருகிறார்.

இதன் மூலம் ரேவதியை உல்லாசத்துக்கு தான் அழைத்ததையும் ஒப்புக் கொண்டே ரேவதி தன்னுடன் உல்லாசமாக இருந்ததையும் சொல்லாமல் சொல்லியுள்ளார் சித்திக்.