பள்ளிக் கூடத்தில் இருந்து வீடு வரை ஹெலிகாப்டர் பயணம்! ரூ.3 லட்சம் செலவில் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு மரியாதை!

ஆசிரியர் ஒருவர் தன் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கியுள்ள சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவி வருகிறது.


ஹரியானா மாவட்டத்தில் நீம்கா என்ற பிரபல அரசு பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மக்கள் படித்து வருகின்றனர். இங்கு குரே ராம் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் 4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்தார். இவர் சத்புரா என்ற பகுதியை சேர்ந்தவர்.

குரே ராம் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு சொந்தமாக வீடு கூட இல்லை. இவருக்கு வேலையில் இருந்து வெளியேறும் நாளில் தன் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்ற ஆசையிருந்தது. இதனை அறிந்த இவருடைய உறவினர்கள் 3 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். 

குரே ராம் சில தினங்கள் முன்னர் 60-வது பிறந்த நாளை கொண்டாடினார். வயது நிரம்பிய தாய் அவர் ஒரு சில நாட்கள் முன்னர் பள்ளியில் இருந்து விடைபெற்றார். 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன் சொந்த ஊருக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார். இதற்காக அப்பகுதியில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்தது. 

சொந்த ஊரை அடைந்தவுடன் மக்கள் இவரை மேளதாளத்துடன் ஆரவாரம் செய்து வரவேற்றனர். இந்த சம்பவமானது காண்போரை மிகவும் நெகிழ வைத்தது.