களம் இறங்கினர் தேசிய மீட்பு படை வீரர்கள்.. சுஜித்தை மீட்க பக்கா பிளான் ரெடி!

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை காப்பாற்றுவதற்காக சென்னையிலிருந்து பேரிடர் மீட்புக்குழு மணப்பாறைக்கு விரைந்துள்ளது .


நேற்று மாலை 5:40 மணியளவில் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையிலிருந்து தற்போது 16 மணிநேரமாக மீட்பு பணி நடைபெற்றுவருகிறது. இதுவரை 5 மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்து சென்று தங்களுடைய மீட்பு பணியை தொடர்ந்து வருகின்றது . இந்நிலையில் அனைத்து மீட்பு குழுவின் முயற்சிகளும் தோல்வி அடைந்ததை அடுத்து சென்னையிலிருந்து பேரிடர் மீட்புக்குழு மணப்பாறை அருகிலுள்ள நடுக்காடு பட்டிக்கு விரைந்துள்ளது . அங்கு விழுந்த 2 வயது சிறுவனை மீட்கும் பணியை துவங்கி உள்ளது. 

 70 அடி ஆழத்தில் இருக்கும் சிறுவனுக்கு ஆக்சிஜனும் வழங்கப்பட்டு வருகிறது . மேலும் கேமராக்கள் மூலமாக சிறுவனின் நடவடிக்கைகளும் மேலிருந்து மானிட்டர் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து குழந்தையின் கைகளில் மூன்று முறை கயிறு கட்டி மீட்டெடுப்பதற்கு முயற்சி செய்தும் அந்த முயற்சி தோல்வி அடைந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அனைத்து முயற்சிகளும் கைவிடப்பட்ட இந்த நிலையில் சென்னையிலிருந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவானது தங்களுடைய மீட்பு பணியை துவங்கி உள்ளது . விரைவில் அந்த குழந்தையை நாங்கள் மீட்டெடுப்போம் எனவும் அந்த குழுவினர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் குழந்தை சுஜித் மீது சேறு விழுந்ததால் அவரது சுவாசத்தைப் பற்றியும் அறிய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.