நடுராத்திரியில் அர்னாப் கோஸ்வாமி - மனைவி மீது தாக்குதல்! பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி! பதற வைக்கும் காரணம்!

நள்ளிரவில் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ரிபப்ளிக் தொலைக்காட்சியின் சீஃப் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி நள்ளிரவில் இரண்டு குண்டர்களால் தாக்கப்பட்டார். ஏப்ரல் 22 மற்றும் 23 தேதிகளில், ரிபப்ளிக் தொலைக்காட்சியில் இடம்பெறும் இரவு 10 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, அர்னாப் கோஸ்வாமியும் அவரது மனைவியும் வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது, ​​பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அர்னாப் கோஸ்வாமியின் காரை தாக்கி உள்ளனர். ஆதாரங்களின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் அர்னப் கோஸ்வாமியின் காருக்கு முன்னால் தங்கள் பைக்கை நிறுத்தி, அவரை காரை நிறுத்தச் செய்து பின்னர் அதைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

அர்னாப் கோஸ்வாமியின் வீட்டிற்கு 500 மீட்டர் இடைவெளி இருக்கும் பொழுது இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. முதலில் அந்த மர்ம நபர்கள் அவர்களின் காரை தாக்கி அதன் மீது பெட்ரோலை ஊற்றி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவரது காரின் கதவு கண்ணாடியை உடைப்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்துள்ளனர். இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி, தன்னுடைய காரை மெதுவாக முன்னோக்கி நகர்த்தி இருக்கிறார்.

பின்னர், அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இடம் இருந்து தப்பித்து தங்களுடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அர்னாப் கோஸ்வாமி இந்த செயலை காங்கிரஸ் கட்சி ஏவிய குண்டர்கள்தான்  செய்திருக்கக் கூடும் என கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலமாக அவர் பகிர்ந்திருக்கிறார்.

தற்பொழுது, அர்னாப் கோஸ்வாமி வெளியிட்ட இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் ஊடகத் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.