மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதால், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு போடும் ஓட்டு வீணாகிவிடும், அதனால் பா.ஜ.க.வுக்கே ஓட்டுப் போடுங்கள் என்ற ரீதியில் பத்திரிகையாளர் மாலன் எழுதிய கருத்துகளுக்கு விரட்டிவிரட்டி கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள் நெட்டிஷன்கள்.
மாலனை விரட்டி விரட்டி வெளுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! பார்ப்பன புத்தியைக் காட்டிவிட்டதாகப் புகார்!

பா.ஜ.க. கட்சிக்கு கூஜா தூக்கும் பார்ப்பான் புத்தியைக் காட்டிவிட்டான் என்று கொந்தளிக்கிறார்கள் தி.மு.க.வினர். இதோ அவர் என்ன சொன்னார் என்பதை படித்துப்பாருங்கள். இதுவரை வெளிவந்த எல்லாக் கருத்துக் கணிப்புகளும் வேறுபாடில்லாமல் ஒன்றைக் குறிப்பிட்டு வந்துள்ளன.
இந்தக் கணிப்பும், நேற்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியான வேறு கணிப்புகளும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் (30 முதல் 33 இடங்களில்) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றன. சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. இந்திலையில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் யோசிக்க வேண்டிய ஒன்று உண்டு. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்குமானால் (தனித்துப் பெரும்பான்மை பெற்றோ, அல்லது சில கட்சிகளின் ஆதரவோடோ) அதில் தமிழகம் இடம் பெற வேண்டாமா?
எதிர்கட்சி வரிசைகளை நிரப்புவதால் என்ன பலன் கிடைத்துவிடும்? நம் உரிமைகளுக்குக் குரல் எழுப்ப முடியும். உண்மைதான். ஆனால் உரிமைக்குரல் உணர்வுகளை வெளிப்படுத்துமேயன்றி வேறெதைச் சாதிக்கும்? உணர்ச்சி நிலையிலேயே , அதுவும் ஒரு கொதி நிலையிலேயே ஒரு மாநிலம் இருப்பது அதன் வளர்ச்சிக்கு உதவுமா? தமிழகத்தில் தழைத்து வரும் வெறுப்பரசியல் மற்றவர்களிடமிருந்து தமிழகத்திற்கு எதிராகத் திரும்பினால் என்ன ஆகும்?
உலகெங்கும் சிறுபான்மையருக்கு இரு வழிகள்தான் உண்டு. மொழிச் சிறுபான்மையோருக்கும்தான். ஒன்று மோதல் மற்றது அனுசரித்தல் மோதிப் பார்த்தால் என்ன ஆகும் என்பதற்கு இலங்கையும், அடையாளங்களை விட்டுவிடாமல் அனுசரித்துப் போனால் என்ன கிடைக்கும் என்பதற்கு சிங்கப்பூரும் நம் கண்ணெதிரே சாட்சிகளாக இருக்கின்றன.
இரண்டிலும் இழப்புக்கள் இருக்கும், மறுப்பதற்கில்லை. ஆனால் மோதலில் சேதம் அதிகம். சமரசங்கள் வலி தருவன. மறுப்பதற்கில்லை. ஆனால் சமரசம் இல்லாத வாழ்க்கை ஒன்றுண்டா? குடும்பத்தில், அலுவலகத்தில், வாழுமிடத்தில், இறுதியில் சுடுகாட்டில் கூட எத்தனை சமரசங்கள்!
யோசித்து வாக்களியுங்கள்.