டேட்டா மற்றும் கால் கட்டணம் உயர்கிறது..! ரிலையன்ஸ் ஜியோ அதிர வைக்கும் முடிவு!

டேட்டா மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.


கடந்த காலாண்டு நஷ்டத்தை தொடர்ந்து வேடாஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் டேட்டா மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. அதிலும் வோடாஃபோன் நிறுவனம் டிசம்பர் மாதம் முதல் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போதைய தொலைத் தொடர்பு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயுடன் ஆலோசனை நடத்திய பிறகு கட்டண உயர்வு அறிவிக்கப்படும் என்று ஜியோ கூறியுள்ளது.

வாடிக்கையாளர்கள் டேட்டா பயன்பாட்டையும், தொலைபேசி அழைப்புகளையும் குறைக்காத அளவிற்கு கட்டண உயர்வு இருக்கம் என்று ஜியோ கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் சந்தையின் தற்போதைய நிலையை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஜியோ கேட்டுக் கொண்டுள்ளது.