அமேசான்..! பிளிப்கார்ட்டுக்கு ஆப்பு..! ஆன்லைன் வர்த்தகத்தில் களம் இறங்கியது ஜியோ..!

ஜியோ நிறுவனமானது அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்று ஜியோ மார்ட் என்ற நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான முகேஷ் அம்பானி சென்ற ஆண்டு ஒரு அறிக்கையில் அமேசான்,ஃப்ளிப்கார்ட் போன்று ரிலையன்ஸ் மார்ட் என்ற நிறுவனத்தை உருவாக்க போவதாக அறிவித்திருந்தார்.

இதனை பல்வேறு கட்டங்களாக கொண்டுவர போவதாகவும் கூறியிருந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பை, தானே, கல்யாண் ஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர். அதன் பணியாற்றும் தன்மையை கருத்தில் கொண்டு நாடு முழுவதிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த முறையின் மூலம் 50,000 பொருட்களை நாடு முழுவதிலும் விற்பதற்கு முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிச்சயமாக அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்க இயலும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.