நெருங்குகிறது புதிய புயல்: வானிலை மைய தகவலால் சென்னையில் பீதி

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வானது, தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.


வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி:தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வானது,  தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. சென்னைக்கு ஆயிரத்து 170 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இன்று இரவுக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இது ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக 15, 16 தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

எனவே 15, 16 தேதிகளில் மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுகின்றனர்.ஆழ்கடல் சென்ற மீனவர்கள் கரை திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழக தென்கிழக்கு வங்கக்கடல் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது.