குறைந்த விலையில் தரமான சேவையில் ரெட்மி நோட் 7 ப்ரோ விற்பனை இன்று பகல் 12 மணி முதல் ஆரம்பம்!!

ரெட்மி யின் புதிய மாடலான நோட் 7 ப்ரோ விற்பனை இன்று பகல் 12 மணி முதல் பிளிப்க்கார்ட் மற்றும் மி(Mi) தளத்தில் ஆரம்பம். இது முந்தய மடல்களை விட குறைந்த விலையில் புதிய தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது.


இதன் சிறப்பம்சமே மிகக்குறைந்த விலையில் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது என்பது தான் ஒரிஜினல் ரெட்மி நோட் 7 ஹார்டுவேரை அடிப்படையாகக் கொண்டே ரெட்மி நோட் 7 ப்ரோ வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1இயங்கு தளத்தில் இயங்கும் .

6.3  இன்ச் டிஸ்பிலே கொண்ட இந்த போன் , இரட்டைநானோ சிம் வசதியை கொண்டுள்ளது .  மேலும் இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல்மெமரியும் கொண்டுள்ள போன் 13,999 ரூபாய்  மற்றும் 6  ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி  இன்டெர்னல்மெமரியும் கொண்டுள்ள போன்  16,999 ரூபாய் ஆகவும்  விற்பனையாகப்படும்  என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பேட்டரி திறண்  4000 எம்.ஏ.எச் ஆகும்.

கேமராவை பொறுத்தவரையில் 48  மெகா பிக்சல் செல்பி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.  ரெட்மியின் மற்ற மாடல்களை ஒப்பிடும் போது இதன் கேகேமிரா சென்சார் முற்றிலும் வேறுபட்டது   இதற்காகவே பிரத்யேகமாக  Samsung ISOCELL GM1 Ultra Clear sensor உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன்  பின்புறத்தில்  5 மெகா பிக்சல் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு அம்சங்களை  கொண்ட ஸ்மார்ட் போனை பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் ஆர்வமாக காத்து கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.