ரெட்மியா? ரியல்மியா? போட்டிபோட்டு கொண்டு விற்பனை களத்தில் இறங்கும் நிறுவனங்கள்! வெல்ல போவது யார்?

குறைந்த விலையில் அதிரடியாக களமிறங்கியுள்ள ஓப்போவின்(sub brand of Oppo) துணை நிறுவனமான ரியல்மி(Realme) ஸ்மார்ட் போன் நிறுவனம், இன்று முதல் இந்தியாவில் ரியல்மி 3 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது


பட்ஜெட்  விலையில் ஸ்மார்ட் போன் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு ஒரு வர பிரசாதம் என்றே கூறலாம். அத்தகைய பயனர்களின் மனநிலையை கருத்தில் கொண்டே இந்த மாடல் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

ரியல்மிஸ்மார்ட்போன் வரும் மார்ச் 12-ம் தேதி முதல் பிளிப்க்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளதுஇதன் விலை ரூ.8,999ஆக நிர்ணயித்துள்ளது.

இத்தகைய குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட் போன் வெளியிடுவதற்கான காரணம்  ரெட்மி தான்.

ஸ்மார்ட் போன் விற்பனையில் சியோமியின்  இடத்தை பிடிப்பதர்காகவே இந்த மாடல் வெளியிடப்பட்டுள்ளது .

6.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட   இந்த ஸ்மார்ட் போனில்   மீடியா டெக் ஹீலியோ P70 பிராசசர்,  ஆகியவை உள்ளன.  இது ஆண்ட்ராய்டு பை (Pie 9.0) இயங்கு தளத்தில் இயங்கும்.

கேமெராவை பொறுத்தவரையில்  13 Mp முன்பக்க கேமெராவும்  மேலும் பின்புறம் 13 மற்றும் 2 Mp கேமெராக்கள் அடங்கும்இதன் பேட்டரி திறன்   4230 mAh ஆகும்.

விலை நிலவரம்:

3 ஜிபி ரேம்  + 32 ஜிபி ஸ்டோரேஜ் = ரூ. 8,999

4 ஜிபி ரேம்  + 64 ஜிபி ஸ்டோரேஜ் = ரூ.10,999