தார்ச்சாலைக்குள் இருந்து வெளியேறிய ரத்தம்..! வாசல் தெளிவத்து கோலம் போட வந்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வாசலில் உள்ள தார் சாலையில் பெண்மணி ஒருவர் தண்ணீர் தெளிக்கும் போது பார்ப்பதற்கு ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் திரவம் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதிக்குட்பட்ட ஈ புதுக்கோட்டை ,அண்ணா நகர் காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமங்கள் என்றாலே பொதுவாக வாசலில் சானத்தையோ அல்லது தண்ணீரையோ தெளித்து தங்கள் வீட்டு வாசலை சுத்தமாக பெண்கள் வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் பெரியகுளம் பகுதிக்கு உட்பட்ட ஈ புதுக்கோட்டை அண்ணா நகர் காலனியில் ஜெயப்பிரியா என்பவர் வழக்கம்போல் தனது வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து உள்ளார். 

அவர் தனது வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்த சில நொடிகளிலேயே ரத்தம் போன்ற சிகப்பு நிறத்தில் திரவம் ஒன்று வெளியேறுவதை கண்ட அந்தப் பெண்மணி அந்த இடத்திற்கு பக்கத்திலேயே தண்ணீர் தெளித்து உள்ளார். அங்கேயும் ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் திரவம் ஒன்று வெளியேறுவதைக் கண்டு அந்தப் பெண்மணி அதிர்ச்சி அடைந்தார்.இதனால் என்ன செய்வதென்று அறியாமல் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமெல்லாம் இதைப் பற்றி கூறியுள்ளார். அவர்களும் இதை கேட்டு ஆச்சரியப்பட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் பார்க்கச் சென்றனர். 

அவர்களும் தண்ணீர் தெளித்த சில நொடிகளிலேயே அங்கேயும் ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் திரவங்கள் வெளியாவதை கண்ட மக்கள் அதிர்ச்சியுடன் கண்டு களித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.