நடிகர் விஜயின் பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மறைந்துள்ள விஷயங்களை தற்போது பார்க்கலாம்.
விஜய்க்கு புத்தம் புதிய டோப்பா! கான்டாக்ட் லென்ஸ்! பிகில் போஸ்டரில் மறைந்துள்ள உண்மைகள்!
படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்த உடனேயே பிகிலில் அப்பா மகன் கேரக்டரில் விஜய் நடிப்பது தெரியவந்துள்ளது. அதிலும் மகன் விஜய் புட் பால் பிளேயர் என்பது அவர் கையில் வைத்திருக்கும் பந்தின் மூலமாக தெரிகிறது. மேலும் அவர் அணிந்துள்ள ஜெர்ஜி இங்கிலாந்தின் மேன்செஸ்டர் கிளப் ஜெர்சியை ஒத்து உள்ளது.
இதே போல் அவரது கையில் உள்ள பந்தும் கூட மேன்செஸ்டர் கிளப் அணியினர் பயன்படுத்தும் ரகத்தை போல் உள்ளது. இதன் மூலம் விஜய் மேன்செஸ்டர் யுனைடைட் அணியின் ரசிகராக படத்தில் காட்சிப்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.
இதே போல் தந்தை விஜயின் கெட் அப்பை பார்க்கும் போதே அவர் மீனவ குப்பத்து தாதா என்பது தெரியவந்துவிடுகிறது. மேலும் பிகில் படத்தில் விஜய் புத்தம் புதிய டோப்பா பயன்படுத்தியிருப்பது தெரிகிறது. மேலும் அவரது கண்களில் கான்டேக்ட் லென்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது.
மீன் வியாபாரியான தந்தை விஜய் மீனவ குப்பத்தின் ராஜாவாக காட்டப்படுவது உறுதி. இது மட்டும் அல்லாமல் படத்தின் டைட்டிலான பிகில் வடிவமைப்பை பார்க்கும் போது அது ஒரு மைதானத்தை நினைவுபடுத்துகிறது. கடைசியில் லவுக்கு மேலே வைக்கப்பட்டுள்ள புள்ளி புட்பால் போல இருக்கிறது.
வட சென்னையில் கிரிக்கெட்டை ரசிப்பவர்களை விட புட் பாலுக்கு அதிக ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் வட சென்னை மீனவ குப்பத்தை சேர்ந்த தந்தை தாதாவாகவும் மகன் புட் பால் பிளேயராகவும் பிகில் படத்தில் கலக்க உள்ளது மட்டும் உறுதியாகியுள்ளது.
இது தவிர தந்தை விஜய் அணிந்துள்ள காஸ்ட்யூம் அப்படியே காலா படத்தில் ரஜினியை நினைவுபடுத்துகிறது. அதே காவி வேட்டி ரஜினி அணிந்திருப்பது போன்ற சட்டை என்ன ஒரே ஒரு வித்தியாசம் காலாவில் ரஜினி சிரித்துக் கொண்டிருப்பார் இதில் விஜய் முறைத்துக் கொண்டிருக்கிறார்.