உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா?

எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.


ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும்.

அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது.

நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம். சுழி’ யை “வளைவு!’ “வக்ரம்’ என்றும் சொல்வர். பிள்ளையாரின் தும்பிக்கை நுனியைப் பார்த்தால், வளைந்து சுருண்டிருக்கும். இதனால், அவரை, “வக்ரதுண்டர்’ என்றும் அழைப்பதுண்டு.

பிள்ளையார் சுழியை, ‘உ’ என எழுதும்போது, முதலில் ஒரு சிறு வட்டத்தில் துவங்குகிறது. வட்டத்திற்கு முடிவே கிடையாது. விநாயகரும் அப்படித்தான். அவரை அறிந்து கொள்வது என்பது பிரம்மபிரயத்தனம். வட்டம் என்பது இந்த பிரபஞ்சத்தை குறிக்குது. இதற்குள் பலவித உலகங்களும், வானமண்டலமும் அடங்கியுள்ளது. அதாவது, விநாயகப் பெருமானுக்குள் சர்வலோகமும் அடக்கம். அவரது பெருவயிறும் அதையேதான் காட்டுகிறது. அந்த வயிற்றுக்குள் அவர் சர்வலோகத்தையும் அடக்கியுள்ளார் என்பது நம்பிக்கை.

‘உ’ எனும் சுழியில் வட்டத்திற்குப் பிறகு, ஒரு நேர்கோடு நீள்கிறது. இதை சமஸ்கிருதத்தில், ‘ஆர்ஜவம்’ என சொல்வர். இதற்கு, ‘நேர்மை’ எனப் பொருள். ‘வளைந்தும் கொடு, அதேச்சமயம் நேர்மையை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதே..’ என்பதே இந்த பிள்ளையார் சுழியின் தத்துவம்.

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் பிள்ளையார் சுழியிலிருக்கும் நேர்க்கோட்டைப்போல நேர்மையை கடைப்பிடிக்கனும்ன்னு இச்சுழி உணர்த்துது. அதே போல, வியாபாரத்தில் உ பிள்ளையார் சுழி போட்டு அதன்மேல் லாபம்ன்னுஎழுதுவாங்க. இவ்வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் நேர்வழியிலானதாக இருக்கட்டுமென்பதே இதன் பொருள். முதன்முதலில் எழுத்துவடிவத்தை கொண்டுவந்தவர் பிள்ளையார். எழுத்துவடிவில் தோன்றிய முதல்நூல் வியாச பாரதம்.