சிவன் கோயிலில் எதற்காக வரிசையாக லிங்கங்கள் தெரியுமா?

சிவாகம விதிப்படி சிவலிங்கத் திருமேனிகள் 108 வகை உண்டு.


அவற்றில் குறிப்பிட்ட லிங்கங்களை மட்டுமே நாம் வணங்குகிறோம். 108 சிவாலயம் என்ற பெயரில் கும்பகோணம் முதல் தஞ்சாவூர் வழியில் பாபநாசம் வரை சிவத்தலத்தில் லிங்கத் திருமேனிகள் உள்ளன. சிவபராக்கிரமம் என்ற நூலில் 64 லிங்கங்களை பற்றிய குறிப்புகள் உள்ளது.

லிங்கமூர்த்தி, லிங்கோத்பவர் முகலிங்கம் ஆட்யம் - இது ஆயிரம் முகங்களுடைய பாணலிங்கம். அநாட்யம் - முகம் அற்றது. சுரோட்யம் - 108 முகங்களை உடையது. சர்வசம் - ஒன்று முதல் ஐந்து வரை உள்ள முகலிங்கம். இந்த விதிகளை பயன்படுத்தி சிவலிங்க மூர்த்தி, சோமஸ்கந்தர், ஏகபாதர், வேள்விநாயகர், சிலந்தராரி, இலகு அளிசர், சக்ரதானர்,அந்தகாசரர், திரிபுராந்தகர், கங்காதரர், ஆபத்சகாயர், ஜோதிலிங்கேசர்,

மச்ச சம்ஹாரர், கூர்மதுங்கரர், வராஹ சம்ஹாரர், நரசிங்க சம்ஹாரர், காலபைரவர், பிட்சாடனர் என்னும் வடிவங்கள் சிவாலயத்தில் இருக்கும்போது அதற்கு சமமான எண்ணிக்கையில் சிவலிங்கத் திருமேனிகள் மன்னர் காலத்தில் வைக்கப்பட்டன. கந்தபுராணம், காசிப சாஸ்திரம் ஆகிய சில்ப நூல்களில் 108 லிங்கத் திருமேனிகள் வைக்கப்பட்டிருப்பது சிவனின் திருவிளையாடல்களை எடுத்துச் சொல்லவே என்று விவரிக்கப்பட்டுள்ளன.