காலையில் எழுந்ததும் உள்ளங்கையை பார்க்கச் சொல்வதன் காரணம் என்ன என்று தெரியுமா?

காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங் கைகளைப் பார்க்க வேண்டும்… இதனால் அன்றைய பொழுது பிரச்னையில்லாமல் சந்தோஷமாக இருக்கும் என்பது இறை நம்பிக்கை.


நமது உள்ளங்களை உடலின் மற்றப்பாகங்களை விட தனித்துவமாக காட்சி அளிக்கும். பொதுவாக வெளுப்பாகவே காணப்படும். இந்த வெளுத்த உள்ளங்கையில் விழிப்பது நல்ல சகுனமாகும். நம் உறுப்புகளில் ஒன்றான கைகள் நாம் அன்றாட பணிகளைச் செய்வதற்கு மிகவும் பயன்படுகிறது. கைகளின் உதவி இல்லாமல் நாம் எந்தவொரு செயலையும் செய்ய முடியாது.

செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்கென்று தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் தான் உதவிகிறது. நாம் உள்ளங்கைகளைப் பார்க்கும் பொழுது இறைவனின் உருவங்கள், அபயவரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தருவதாக தோன்றும். இதனால் இறைவனின் உருவத்தின் பெருமைகளை கைகள் வெளிப்படுத்துகின்றன. எனவே கைகள் கடவுளுக்குச் சமமானது என வேதங்கள் சொல்கின்றது.

ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. இந்த சாஸ்திரத்தில் கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாக கூறப்படுகிறது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெறுவதற்கு தான் நாம் காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும் என்று புராணங்களில் கூறப்பட்டதை நாம் பழக்கவழக்கமாக கொள்கிறோம்.

மேலும் நாம் காலையில் எழுந்து நம் உள்ளங்கைகளை பார்க்கும் போது,

”கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி

கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்”

என்ற ஸ்லோகத்தை கூற வேண்டும். இதனால் அன்றைய நாள் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். காரியத் தடைகள் இருக்காது இந்து தெய்வங்களை பார்த்தோமானால் பல தெய்வங்கள் கைகள் வணங்கிய படியும், பெரும் பாலான தெய்வங்கள் தங்களது உள்ளங்ககைகள் மூலம் ஆசி வழங்குவது போன்றும் காட்சி அளிப்பதை காணலாம்.

இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்…). ஒருவரின் திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்…

கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். இப்படிப்பட்ட நமது கைகளை காலையில் எழுந்ததும் பார்த்துவிட்டு எழுந்தால் அன்றைய பொழுது உங்களுக்கு குதூகலம்தான்…