வடக்கில் தலைவைத்து படுத்தால் மூளை பாதிக்கப்படும் என்பது உண்மைதானா? பிரபஞ்ச ஆற்றல் தத்துவம்!

காந்த சக்தியை அடிப்படையாக வைத்து தான் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது .


சூரியன் தன் ஈர்ப்பு மற்றும் தள்ளும் ஆற்றலான காந்த சக்தியின் மூலமாக எண்ணற்ற கோள்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. அப்படி சூரியனின் காந்த ஆற்றலால் இயங்கும் கிரகங்களுக்கு சுய காந்த சக்தியும் உண்டு. இதைத்தான் பொதுவாக ஈர்ப்பு சக்தி என்று சொல்வது உண்டு. இதில் சூரியனைத் தவிர மற்ற அனைத்து கோள்களையும் விட பூமிக்கு ஈர்ப்பு சக்தியான காந்த ஆற்றல் அதிகம்.

இப்படி அண்டசராசரம் மூலம் எண்ணற்ற சூரிய குடும்பங்களில் இத்தகைய ஈர்ப்பு சக்தியாக விளங்கும் காந்த சக்தியே பரம்பொருள் சக்தி எனப்படுகிறது. அதுவே நம் உடலிலும் மற்ற அனைத்து ஜீவராசிகளின் உடலிலும் உயிராக விளங்குகிறது.

ஒரு சக்தி இருக்குமானால் அந்த சக்தியை வெளிப்படுத்தும் மூலப்பொருள் இருக்கும். அதுவே பரம்பொருள் ஆகும். இந்தப் பரம்பொருள் சக்தியை உடல் வாழ்க்கைக்காக அதிகம் விரயம் செய்யாமல் ஒரு புள்ளியில் குவிக்கும் பொழுது இத்தகைய சூட்சும ரகசியங்களை உணரலாம் என்று நம் முன்னோர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈர்ப்பு சக்தியை பெற்றுள்ள பூமியில் உள்ள அனைத்திலும் அந்த ஈர்ப்பு சக்தி இருக்கிறது. எனினும் அந்தப் பொருள்களின் மூலகங்களை பொறுத்து அந்த ஈர்ப்பு சக்தியானது கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கிறது. இதில் மன ஆற்றலைப் பெற்றுள்ள மனிதனிடத்தில் இந்த காந்த ஆற்றல் அதிகம் இருக்கிறது என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.

மனிதனிடம் உள்ள காந்த சக்தியானது பலவிதமான செயல்களை முன்னிட்டு பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இடகலை, பிங்கலை என்கிற சூட்சம நாடிகள் மூலம் அது தேகத்தை இயக்குகிறது. இன்னும் எண்ணற்ற நாடிகள் நம் சூட்சும தேசத்திலும் ஸ்தூல தேகத்திலும் உண்டு. இவை நேர் மற்றும் எதிர் மின் ஆற்றலை கொண்டவை. நம்மிடம் உள்ள இந்த இரு மின் சக்திகளையும் ஒன்று சேர்ப்பதன் மூலம் மேலும் அதிகமான பரம்பொருள் சக்தியாகிய காந்த சக்தியை பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுவாக காந்தத்திற்கு இரண்டு துருவங்கள் உண்டு. அவை வட துருவம் தென் துருவமாகும். அதுபோல நம் உடல் முழுவதும் பரவியுள்ள காந்த சக்தியின் வடதுருவம் நம் தலைப் பகுதியாகும். தென்துருவம் கால் பகுதியாகும். இதனால்தான் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று சொல்வார்கள். அது ஏனென்றால் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும்.

ஒரே துருவங்கள் ஒன்றையொன்று தள்ளும். எனவே நாம் வடக்கே தலை வைத்து படுக்கும் பொழுது பிரபஞ்ச ஆற்றலான காந்த சக்தியின் வடதுருவமானது நம் உடலில் தலைப்பகுதியில் உள்ள வட துருவத்தை தள்ளும். இதனால் முரண்பட்ட உணர்வுகள் ஏற்படும். கனவுகள் தோன்றும். ஆழ்ந்த உறக்கம் கிட்டாது. மேலும் இரவு உறங்கும் பொழுது நமக்கு கிடைக்கும் அதிகமான பிரபஞ்ச ஆற்றல் கிடைக்காமல் போய்விடும். இதனால் உடல்நலக் குறைவு, மனச்சோர்வு போன்ற துன்பங்கள் ஏற்படும்.

வடக்கில் தலை வைத்து படுப்பவர்களுக்கு மூளை தொடர்பான அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் எக்காரணம் கொண்டும் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது. நிச்சயம் ஒரு அறையில் இரண்டு ஜன்னல்களும் ஒரு கதவும் இருக்கவேண்டும். முறையான காற்றோட்டம் ரொம்பவே முக்கியம்.