தீய சக்திகள் வீட்டில் நுழையாமல் இருக்க வேண்டுமா? மிக எளிய தண்ணீர் பூஜை!

இறைவனின் அருளை வேண்டி மனம் முழுவதும் ஈடுபடும் ஒரு விஷயம்தான் பூஜை.


ஆண்டவனை மனமுருக வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைக்க வேண்டும்?... என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்...

ப்ர என்றால் கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும்போது, ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும் என்பது நம்பிக்கை. நாம் பூஜை செய்யும்போது இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதுண்டு. அதாவது எச்சில் படாத உணவுகள், பழங்கள் ஆகியவற்றை நாம் கடவுளுக்கு வைக்கலாம்.

நம்முடைய பூஜையறையில் மண் பானைகளிலோ அல்லது செம்பு பாத்திரத்திரங்களிலோ தண்ணீரை நிரப்பி வைப்பது மிகவும் நல்ல பலனை தரும். வழிப்பாட்டின்போது நாள்தோறும் தியானத்தில் அமர்ந்து நமக்கு பிடித்த தெய்வத்தின் மூல மந்திரத்தை சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் சொல்லும் மந்திரத்தின் (நேர்மறை ஆற்றல்) அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். இவ்வாறு செய்து அந்த தண்ணீரை அருந்துவதால் நன்மைகள் உண்டாகும்.

பூஜையின்போது தீபாராதனை காட்டி, தெரிந்த தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடலாம். எந்தவொரு காரணத்தை முன்னிட்டும் இரும்பு பொருட்களை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது. இரும்பு எமனுக்கு உரியது. இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது. தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, வெள்ளி, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

பூஜை செய்யும்போதெல்லாம் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்தநாள் அதை செடியின் மீது ஊற்றிவிட வேண்டும். இப்படி செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டை அண்டாது.

பூஜையின்போது மணியோசை எழுப்புவதும் கூட துர்சக்திகள் நெருங்காமல் இருப்பதற்குத்தான். மணியின் இனிய ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்விக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது. தினமும் மணியோசை எழுப்பி பூஜை செய்பவர்களின் வீடுகளில் தெய்வ கடாட்சம் நிரம்பி, ஆரோக்கியமும் சகல சௌபாக்கியங்களும் பெருகும்.