பசுவிற்கு அகத்திக்கீரை ஏன் கொடுக்கிறோம்னு தெரியுமா?

பசுவை வணங்காத சித்தர்களோ, துறவிகளோ இல்லை என்று கூடக் கூறும் அளவுக்கு பசுவின் மீதான பக்தி உள்ளது.


தெய்வீகத் தன்மை காரணமாகவே தேவலோகத்தில் கூட பசு (காமதேனு) வணங்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே பசுவை வணங்க வேண்டும். உலகில் உள்ள பசுக்கள் அனைத்தும் தமிழ் மொழி பேசுகிறது என்பது வாரியார் சுவாமிகளின் அறிவுப் பூர்வமான வாதம். எனவே இறைவனால் படைக்கப்பட்ட முதல் மொழி தமிழ் என்பதும் அவரது கூற்று.

பசுவின் மகத்துவமும், தெய்வீகத் தன்மையும் நல்லவர்களுக்கே புரியும். உதாரணமாக இராமாயணத்தில் பரதனை விட்டு ராமனைப் பிரியும் போது, பரதன் வேதனை தாளாமல் புலம்புவார்.

உன்னை பிரியும் அளவுக்கு என்ன பாவம் செய்தேன். பசுவுக்கு உணவு வழங்காமல் இருந்தேனா, இல்லை கன்று பால் கொடுக்கும் சமயத்தில் அதனை தாய் பசுவிடம் இருந்து பிரித்தேனா, பசுவை அடித்து துன்புறுத்தினேனா, என்றெல்லாம் கூறி வருந்துவார். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது பசுவாகும்

அகத்தி கீரையை 1 நாள் வீட்டில் வைத்திருந்து சனிக்கிழமையில் பசுவுக்கு கொடுத்து வணங்கி அதன் கோமய நீரை மஞ்சள் நீருடன் கலந்து வீட்டில் தெளிக்க பில்லி சூன்யங்கள் விலகிவிடும். விலங்கு இனங்களில் அம்மா என்ற ஓசையை ஆசையாய் எழுப்புவது பசு மட்டுமே. ஆகவே அதனுள் இறை சக்திகள் நிறைந்துள்ளன.

பசுவைக் கண்டால் மகா லட்சுமியைக் கண்டதாக பொருளாகிறது. தீட்டு, துர் மந்திரக்கட்டு இவைகள் அகன்றிட புதன்கிழமை பசுவுக்கு அகத்திக் கீரை தர வேண்டும். ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்து இறந்தால் மீண்டும் புத்திர சோகம் அகன்று குழந்தை பிறக்க கோவந்தனம் செய்து கீரை தரலாம். நல்ல சுத்தமான அகத்திக்கீரைகளையே கொடுக்க வேண்டும்.

பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால் முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

பசுவை பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும். பசுவினை வழிபட்டால் முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப விஷயங்கள் விரைவில் நடந்தேறும். குறிப்பாக பசுவிற்கு அம்மாவாசை தினங்களில் அகத்திக் கீரை கொடுத்து வந்தால் புத்திர தோஷம் மற்றும் பிதுர் சாபம் நீங்கும்.

பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.