முதல் கணவனை ரஜினி மகள் விவாகரத்து செய்தது ஏன்! 4 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமான அந்தரங்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தன் கணவரை பிரிந்ததற்கான முக்கிய காரணம் என்ன என்று தற்போது வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்று பெருமையாக அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். இளைய மகளான சௌந்தர்யா, பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான அஸ்வின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் வேத் என்ற ஒரு மகனும் உள்ளார். இருப்பினும் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இறுதியில் இருவரும் விவாகரத்தும் செய்து விட்டனர். 

இதனைத்தொடர்ந்து தன்னுடைய அப்பா வீட்டில் வாழ்ந்து வந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் , கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விசாகன் என்ற ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சௌந்தர்யா தன்னுடைய முதல் கணவரான அஸ்வினை விவாகரத்து செய்ததற்கான முக்கிய காரணம் என்ன என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அஸ்வினும் சௌந்தர்யா ரஜினிகாந்தும் பிரிந்ததற்கான முக்கியகாரணம் சௌந்தர்யாவின் கோபம்தான். அவரது கோபத்தை குறைத்துக் கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் பலமுறை அறிவுரை கூறியுள்ளாராம். இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சௌந்தர்யா காட்டிய கோபம் தான் அவருக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் இடையே ஏற்பட்ட விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.