விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்!

பொதுவாகவே நம் முன்னோர்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதற்குப்பின் ஒரு அறிவியல் அர்த்தமும் ஒளிந்திருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


அந்தவகையில் விநாயகருக்காக நாம் போடும் தோப்புக்கரணத்தின் பின்பும் ஒரு மிகப்பெரிய அறிவியல் யுக்தி அமைந்துள்ளது. 

நாம் அனைவருமே விநாயகரை வணங்கிய பின்பு தோப்புக்கரணம் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம் 

தோப்பு கரணம் என்பது வலது கையை இடது காதுகளிலும் இடது கையை வலது காதையும் பிடித்துக் கொண்டு தரையை நோக்கி உட்கார்ந்து எழுந்து கொள்வது. தோப்புக்கரணம் போட்ட பின்பு நெற்றியில் குட்டி கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளோம். இவ்வாறாக நாம் செய்வதின் மூலம் நம்முடைய ரத்த ஓட்டம் சீராகப்பட்டு நம் உடலும் சுறுசுறுப்படைகிறது என்று அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. இந்த பழக்கத்தை இன்றும் பல வெளிநாடுகளில் உடற் பயிற்சியாகவும் மனப் பயிற்சியாகவும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றனர்.

இந்த தோப்புக்கரணம் போடுவதற்கு பின்பு மிகப் பெரிய புராணக் கதையும் ஒளிந்து கொண்டிருக்கிறது. கமண்டலத்தை கையில் எடுத்துக்கொண்டு அகத்திய முனிவர் நடந்து வந்தபோது காக வடிவில் வந்த விநாயகர் அந்த கமண்டலத்தை தட்டி விட்டார் அப்போது கமண்டலத்தில் இருந்த நீர் கீழே ஊற்றப்பட்டது. இதனையடுத்து விநாயகர் அந்தண சிறுவனாக அகத்தியருக்கு காட்சியளித்தார். தன்னுடைய கமண்டலத்தை கீழே தட்டி விட்டதால் மிகவும் ஆத்திரமடைந்த அகத்திய முனிவர் அந்த சிறுவனின் தலையில் குட்டினார். உடனே தன்னுடைய உண்மையான சுய ரூபத்தில் விநாயகர் அகத்திய முனிவருக்கு காட்சியளித்தார்.

கமண்டலத்தை தட்டி விட்டது விநாயகர் என்று அறிந்த அகத்திய முனிவர் , தான் செய்த தவறை நினைத்து தன்னுடைய நெற்றிப்பொட்டில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன.