விநாயகர் சதுர்த்தி முடிந்த மூன்றாம் நாளில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்கு பின்னாலுள்ள அறிவியல் உண்மை!

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மூன்று நாட்களுக்கு பிறகு ஏன் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது என்ற உண்மையை பற்றி நாம் காண்போம்.


எப்போதுமே நம் முன்னோர்கள் எதை கூறினாலும் அதில் ஒரு அர்த்தம் இல்லாமல் இருக்காது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய பிறகு மூன்றாம் நாளில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம் . இந்த செயலுக்குப் பின்னால் உள்ள உள்நோக்கம் என்ன என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இதற்குப் பின்னால் உள்ள காரணத்தை நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இப்போது அதனை காண்போம் .

ஆடிப்பெருக்கு நிகழ்ச்சியின்போது கட்டுக்கடங்காத வெள்ளம் ஏற்பட்டால் அப்போது ஆற்றில் உள்ள நீர் மொத்தமாக அடித்து சென்று விடும். அப்போது நீரும் இருக்காது ஆற்று மணலும் இருக்காது . இதனை தடுக்கும் விதமாக தான் நம் முன்னோர்கள் ஒரு யோசனையை செய்தார்கள் . அந்த வகையில் விநாயக சதுர்த்தியை பயன்படுத்தி மிகப் பெரிய பிள்ளையார் சிலைகளை உருவாக்கினர்.

 அந்த சிலைகள் அனைத்தும் களிமண்ணால் ஆனவை. இந்த களிமண்ணால் ஆன சிலைகளை பயன்படுத்தி விநாயக சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடினர். இதற்குப் பின்பு இந்த பிள்ளையார் சிலைகளை கொண்டு நீர்நிலைகளில் கரைத்து விடுவர். இதன் மூலம் அதிலிருந்து வெளிவரும் களிமண் ஆற்றில் உள்ள நீரை அப்படியே தங்க வைத்துக் கொள்ளும். இதன்மூலம் நீரும் ஆற்றை விட்டு வெளியேறாது மற்றும் மக்களுக்கு தண்ணீர் பஞ்சமும் ஏற்படாது. இதன் காரணமாகத்தான் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தியன்று சற்று ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் மூன்று நாட்களுக்கு பிறகு அதன் ஈரப்பதம் முற்றிலுமாக குறைந்து நீரை உறிஞ்சுவதற்கு வசதியாக மூன்று நாட்களுக்கு பிறகே விநாயகர் சிலை நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது .

பிள்ளையாரை மூன்று நாட்களுக்குப் பின்னால் நீரில் கரைக்கும் செயலுக்குப் பின்னால் எவ்வளவு பெரிய புவியியல் சம்பந்தப்பட்ட விஷயத்தை நம் முன்னோர்கள் அடக்கி உள்ளனர் என்பது மிகவும் ஆச்சரியப்படக் கூடிய ஒன்றாகும்.