போகிப் பண்டிகை இந்திர தேவனுக்காக ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

மக்கள் மனதில் உள்ள மடமையை போக்கவும் நல்ல எண்ணங்களை விதைப்பதற்கும் கொண்டாடப்படும் பண்டிகை தான் போகி பண்டிகை.


ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாக நாம் தமிழர் மரபில் கொண்டாடப்பட்டு வருகிறது. எப்பொழுதும் போகி பண்டிகைக்கு முந்தைய நாள் வீட்டிற்கு வெள்ளை அடிக்கப்பட்ட சுத்தம் செய்யப்பட்டு பழையனவற்றை ஒதுக்கி வைக்கப்படும். பின்னர் போகி அன்று அதிகாலை தமிழர்களின் இல்லங்களிலும் வாசலில் நிலை பொங்கல் வைக்கப்படும் . 

இந்த நிலை பொங்கலின் போது நம் வீட்டில் இறந்து போன சுமங்கலிப் பெண்கள், கன்னிப்பெண்கள், வயதானவர்கள் ஆகியோருக்கு புடவைகள் படைத்து வணங்கப்படும். அதாவது போகி பண்டிகையானது இறந்தவர்களின் ஆன்மாக்களை குளிர செய்வதற்கான பண்டிகையாகும்.

போகி என்றால் "போகங்களை அனுபவிப்பவன்" என்று பொருளாகும். அதாவது இந்த திருநாளை கொண்டாடு வதற்கு முன்பு கொண்டாடப்படும் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தான் அந்த போகி பண்டிகை ஆகும். அதேபோல் பண்டைய தமிழர்களின் வழக்கப்படி இந்த ஆண்டு முழுவதும் நாம் செய்த பாவங்களையும் குற்றங்களையும் திருத்திக் கொள்வதற்கு நாம் செய்த பாவங்களை தீயிலிட்டு கொளுத்தி அதனை விட்டு வெளியேறுவதற்காக போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதுதான் "பழையன கழிதலும் , புதியன புகுதலும்" போகி என்று பண்டைய தமிழர்களால் அழகாக அர்த்தமாக கொண்டாடப்பட்டது.

ஆனால் இன்றைய தினமோ, இந்தப் பண்டிகையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளாமல் நாம் பிளாஸ்டிக் பொருட்களையும் டயர்களையும் போட்டு தீயிலிட்டு கொளுத்தி நம் அழகான சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறோம் . இதனால் காற்று மாசுபாடு உச்சகட்டத்தை அடைந்து இருக்கிறது. ஆகையால் நாம் அனைவரும் விழிப்புணர்வோடு நம்முடைய தமிழர் மரபு மற்றும் பண்பாடு ஆகியவற்றை காத்து இயற்கை தந்த இந்த அரிய பொருட்களை பத்திரமாக பாதுகாப்போம் என்று இந்நாளில் உறுதி அளிப்போம்.