விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைப்பதன் காரணம் இதுதான்!

எந்த செயலை ஆரம்பித்தாலும் நம் முன்னோர்கள் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


சிதறு தேங்காய் உடைப்பது போல நம்முடைய தடைகள் அனைத்தையும் தகர்த்தெறி விநாயகர் எனும் ஒரு நம்பிக்கை நம் முன்னோர்களிடம் இருந்து வந்தது . இது மட்டுமல்லாமல் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு பக்தர்கள் வேண்டிக்கொண்ட விதமாக பிள்ளையாருக்கு ஒற்றை இலக்க எண் அடிப்படையில் தேங்காய்களை உடைத்து வழக்கமாகும்.

இந்த சிதறுகாய் உடைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியது என்று தெரியுமா ? இதற்கான காரணத்தை நாம் இப்போது பார்ப்போம் !

ஒரு கிராமத்தில் மகோற்கடர் என்ற ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார் இந்த முனிவரின் அவதாரமாக விநாயகர் தோன்றி அவரது ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார். அப்போது யாகம் ஒன்றில் பங்கேற்பதற்காக முனிவர் வேடத்தில் இருந்த விநாயகர் கையில் கலசங்களைக் எடுத்து கொண்டு கிளம்பினார். மகோற்கடர் என்ற முனிவரின் வடிவாக விநாயகர் இருப்பது தெரியாத ஒரு அசுரன் அவரை அழிப்பதற்காக பின் தொடர்ந்தான். அசுரன் தன்னை பின்தொடர்வதை அறிந்த விநாயகர் தன் கையிலிருந்த கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது அடித்து அவனை தடுத்து நிறுத்தினார். இதன் மூலம் அந்த அசுரனின் தடையை தாண்டி அந்த யாகம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதனால் விநாயகருக்கு வினைகள் தீர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் கிடைத்தது. .இதன் காரணமாகவே சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.

இது மட்டுமில்லாமல் எந்த செயலைத் தொடங்கினாலும் அதற்கு முன் ஒரு சிதறுகாய் உடைத்தால் அந்த செயலில் உள்ள தடைகள் அனைத்தும் தகர்த்து எறியலாம் என்பது பக்தர்களிடம் இருக்கும் வலுவான நம்பிக்கையாகும்.