நிறைய ஆண் சகவாசம்..! நம்பிக்கை துரோகம்..! டிடியை விவாகரத்து செய்தது குறித்து மனம் திறந்த கணவன்!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை வேலை செய்பவர் டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி.


பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் டிடி. இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். டிடி டிவி சேனலில் பணியாற்றி வரும் போது கடந்த 2014ம் ஆண்டு தன்னுடைய குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்தர் என்பவரை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதற்குப் பின்பு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்த போதிலும் இவர்கள் பிரிவிற்கான காரணம் யாது என்று இதுவரை இருவருமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் இருவரது பிரிவிற்கான காரணத்தை டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

அதாவது திருமணத்திற்கு பின்பு டிடி எந்த ஒரு சினிமா, டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்றும் மேலும் அவர் சினிமா திரைப்படங்களிலும் நடிக்க கூடாது எனவும் ஸ்ரீகாந்த் டிடி இடம் கூறியிருக்கிறாராம் . ஆனால் திருமணம் முடிந்த பின்பு அந்த வார்த்தைகளை அவர் காப்பாற்றவில்லை. மேலும் டிடி க்கு நிறைய ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருப்பதாலும் இந்த விவாகரத்து ஏற்பட்டதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.