திருமணமான நடிகருடன் காதல்..! 8 வருடத்திற்கு பிறகு வெளியான காமெடி நடிகை ஷோபனா தற்கொலைக்கான காரணம்!

பிரபல காமெடி நடிகை சோபனா கடந்த 2011ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் , நடிகை சோபனா தற்கொலை செய்து கொண்டதற்கான உண்மை காரணம் தற்போது தெரியவந்துள்ளது .


பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திவந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சோபனா . நடிகை சோபனா தனது சிறப்பான நடிப்பாற்றல் மூலம் மிக வேகமாக திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடிக்க தொடங்கினார்.

ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடிகை ஷோபனா காமெடியில் கலக்கி புகழ்பெற்றார். இவர் யாரும் எதிர்பாராத வகையில் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ம் தேதி தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

32 வயதுடன் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் இருந்த நடிகை சோபனா , தனது அம்மாவுடன் கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தங்கியிருந்தார் . இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் 2011 ஆம் ஆண்டு நடிகை சோபனா தனது வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை சோபனாவின் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் , 8 வருடத்திற்கு பிறகு நடிகை சோபனாவின் தற்கொலைக்கான காரணத்தை அவரது அம்மா தற்போது வெளியிட்டுள்ளார். நடிகை சோபனா ஒரு நபரை காதலித்ததாகவும் அந்த நபர் நடிகை சோபனாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் , அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்த சோபனா சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவரது அம்மா கூறியுள்ளார் .

இந்த காரணத்தினால் தான் நடிகை ஷோபனா தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவரது அம்மா தற்போது அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இதனிடையே ஷோபனா காதலித்தது திருமணமான ஒரு நடிகரை என்றும் அவரும் காமெடி நடிகர் தான் என்றும் கூறுகிறார்கள்.