சீனாவை சேர்ந்த ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மி நிறுவனம் அண்மையில் ரியல்மி 3 ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை இன்று முதல் முதலாக ரியல்மி ஸ்டார் & பிளிப்கார்ட் தளத்தில் ஆரம்பம் ஆனது.
இன்று முதல் விற்பனைக்கு களமிறங்கும் ரியல்மி 3! அதுவும் இவ்வளவு குறைந்த விலையிலா?? ஆச்சரியப்படுத்தும் சிறப்பு அம்சங்களுடன்!

ரியல்மி 3 -யின் விற்பனை விவரம்:
Realme 3 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் & 32 ஜிபி சேமிப்பு கொண்ட ஸ்மார்ட் போன் விலை ரூ. 8,999 ஆகும், 4 ஜிபி ரேம் / 64 ஜிபி உள் சேமிப்பு கொண்ட ஸ்மார்ட் போன் விலை ரூ 10,999.
Flipkart மற்றும் Realme இன் ஆன்லைன் ஸ்டோர் வழியாக ஸ்மார்ட்போன் இன்று விற்பனை தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து, ரூ .5,300 மதிப்புள்ள டேட்டா நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
ரியல்மி 3 -யின் சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 9.0 Pie இயங்குதளம்
6.2 இன்ச்ஸ் டிஸ்பிலே மற்றும் கொரில்லா கிளாஸ் வசதியுடன்
அக்டோ கோர் மீடியா டெக் ஹெலியோ பி70 சிப்செட்
3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் வித்தியாசத்தில் கிடைக்கும்
256 ஜிபி வரையிலான மெமரி நீட்டிப்பு சேவை
13 Mp + 2Mp பின்பக்க கேமரா
13 Mp செலஃபீ கேமரா
4,230 mAh பேட்டரி