ரிஷாப் பாண்ட்க்கு ஷு லேஸ் கட்டிவிட்ட நம்ம சின்ன தல! சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப் என்று குவியும் பாராட்டு!!!

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் 2 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது


டாஸ் வென்ற சென்னை அணி, டெல்லி அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்கம் முதலே சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் திணறினர். ரிஷாப் பாண்ட் மட்டும் 25 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார்.

இவ்வாறாக ரிஷாப் பாண்ட் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தபோது அவரது ஷு  லேஸ் கழன்றி விட்டது.  இதனை பார்த்த csk வீரர் நம்ம "குட்டி தல" ரெய்னா  ரிஷாப் பாண்டிற்கு ஷு  லேசை கட்டிவிட்டார்.  இது அங்கிருந்த ரசிகர்களை பெரும் ஆர்ச்சியத்திற்குள் ஆக்கியது.  எதிர் எதிர் அணி வீரார்களுடன் இத்தகைய ஒற்றுமையை பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகினறனர்.

மேலும் ஐபில் நிர்வாகமும் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு இட்டு இதுதான் உண்மையான ஜென்டல் மேன் கேம் என்று கூறியுள்ளது.  

இதுதான் சிறந்த ஸ்போர்ட்மன் ஷிப் என பலரும் நம்ம குட்டி தலையை பாராட்டிவருகின்றனர்.  இத்தனைக்கும் ரிஷாப் பாண்ட் ஒரு வளர்ந்து வரும் ஆட்டக்காரர்.  ஆனால் ரெய்னாவோ நல்ல அனுபவமுள்ளவர் , இருந்தும்  ரிஷாப் பாண்டிற்கு ஷு லேஸ் கட்டிவிட்டது என்பது ஒரு சிறந்த செயலாகும்.